பெட்ரோல் பங்க் ஊழியரிடம் பணப்பை பறிப்பு..வெளியான அதிர்ச்சி CCTV

x

பெட்ரோல் பங்க் ஊழியரிடம் இருந்து பணப்பை பறிப்பு

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே பெட்ரோல் நிரப்புவது போல சென்று பெட்ரோல் பங்க் ஊழியரிடம் இருந்த பணப்பையை திருடி சென்ற மர்ம நபர்களின்

சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. நெய்யாற்றின் கரை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர், பெட்ரோல் பங்க் ஊழியரிடம் இருந்த பணப்பையை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்து சென்றனர்.

அந்தப் பையில் 21 ஆயிரம் ரூபாய் இருந்ததாக கூறப்படும் நிலையில், போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்