மணமேடையில் வைத்து தம்மை தூக்கிய நபரை மணப்பெண் கன்னத்தில் அறைந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. வித்தியாசமாக மாலை அணிவிக்க நினைத்த உறவினர்கள் மண மகனை தூக்கினர். அதேபோல மணப்பெண்ணையும் தூக்குமாறு பெண் ஒருவர் கூற, கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் மணப்பெண்ணை தூக்கியுள்ளார். இதில் கோபமடைந்த பெண், அந்த நபரை கன்னத்தில் அறைந்தார். இதனால் அவமானம் அடைந்த அந்த நபர், மணப்பெண்ணை தூக்க சொன்ன பெண்ணை கன்னத்தில் அறைந்துவிட்டு அங்கிருந்து சென்றார். இதனால் திருமண வீட்டில் பரபரப்பு ஏற்பட்டது.