Uttarpradesh மதுபான கடையை சூறையாடிய பெண்கள்... அடித்து நொறுக்கும் வைரல் வீடியோ

அடித்து நொறுக்கும் வைரல் வீடியோ

#uttarpradesh | #liquor மதுபான கடையை சூறையாடிய பெண்கள்... அடித்து நொறுக்கும் வைரல் வீடியோ உத்தர பிரதேசத்தில், மதுபான பாட்டில்களை சாலையில் தூக்கியெறிந்து பெண்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. லலித்பூர் பகுதியில் அமைந்துள்ள மது கடையை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மது கடையின் பூட்டை உடைத்த பெண்கள், கடையில் இருந்த மது பாட்டில்களை சாலையில் தூக்கி வீசி காலில் போட்டு மிதித்து அடித்து நொறுக்கினர். சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள் சாலையில் கொட்டி அடித்து நொறுக்கப்பட்டன. தகவல் அறிந்து சென்ற போலீசார், பெண்களை சமாதானப்படுத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com