

காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞர் மதம் மாற மறுத்ததால் காதலியின் அண்ணனால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே போணக்காடு பகுதியைச் சேர்ந்தவர் மிதுன். கம்ப்யூட்டர் ஆப்பரேட்டரான இவர், கடந்த 29 ஆம் தேதி பெற்றோர் எதிர்ப்பை மீறி தீப்தி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். திருமணம் மிதுன் சார்ந்த மத முறைப்படி நடந்ததுள்ளது. இந்த நிலையில், தீப்தியின் சகோதரர் டானிஷ் மிதுனை தங்கள் மதத்துக்கு மாற வேண்டும் என வற்புறுத்தியுள்ளார். இதனை மிதுன் மறுக்கவே, டானிஸ் பட்டப்பகலில் நடுரோட்டில் வைத்து கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். காதல் மனைவி கண்முன்னே நடந்த இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இதையடுத்து போலீசார் டானிஷ் மற்றும் அவரது நண்பர்களை தீவிரமாக தேடிவருகின்றனர்.