Vinayagar Statue Issue | விநாயகர் சிலையால் வெடித்த மோதல் - புதுவையில் திடீர் பதற்றம்
புதுச்சேரியில் பாஜக - கம்யூனிஸ்ட் கட்சியினர் இடையே மோதல்
புதுச்சேரியில் கம்யூனிஸ்ட் கட்சியினர் லெனின் சிலை நிறுவியதற்கு எதிராக, இந்து முன்னணியினர் விநாயகர் சிலையை வைத்ததால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. நெல்லித்தோப்பு பகுதியில் மணிமேகலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே அரசு புறம்போக்கு இடத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லெனின் சிலை நிறுவப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் அதே இடத்தில் விநாயகர் சிலையை வைத்து பூஜை செய்தனர். இதையடுத்து கம்யூனிஸ்ட் கட்சியினர் அங்கு குவிந்ததால், இரு தரப்பினருக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்ட நிலையில், போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். பின்னர் வருவாய்த் துறை அதிகாரிகள் லெனின் சிலையை தார்ப்பாயால் மூடிய நிலையில், விநாயகர் சிலை அகற்றப்பட்டது.
