ஏ.டி.எம். இயந்திரத்தில் கார்டை நுழைத்தால் குட்டி விநாயகர் சிலையை பெறலாம்

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் பணம் எடுக்கும் ஏ.டி.எம். வடிவில் உருவாக்கப்பட்ட இயந்திரத்தில் இருந்து, சிறிய அளவிலான விநாயகர் சிலை வருகிறது.
ஏ.டி.எம். இயந்திரத்தில் கார்டை நுழைத்தால் குட்டி விநாயகர் சிலையை பெறலாம்
Published on
விநாயகர் சதுர்த்தி விழா, நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் பணம் எடுக்கும் ஏ.டி.எம். வடிவில் உருவாக்கப்பட்ட இயந்திரத்தில் இருந்து, சிறிய அளவிலான விநாயகர் சிலை வருகிறது. இதற்கென தனியாக ஏடிஎம் கார்டுகளும் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்தக் கார்டை இயந்திரத்தில் உள்ளே நுழைத்தவுடன், பணம் வருவது போல், சிறிய டப்பாவில் வைக்கப்பட்ட விநாயகர் சிலை வருகிறது. இந்த "விநாயகர் சிலை ஏடிஎம் இயந்திரத்தை" தயாரித்த சஞ்சீவ் குல்கர்னி கூறும்போது, நவீன தொழில்நுட்பத்தில் கலாச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியாக இது உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.
X

Thanthi TV
www.thanthitv.com