

தொழில் அதிபர் விஜய் மல்லையாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு உள்ள சொத்துக்கள் மற்றும் பங்குகளை விற்க, கடன் வழங்கிய வங்கிகளுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளதாக பஞ்சாப் நேஷனல் வங்கி நிர்வாக இயக்குநர் மல்லிகாஜூர்னா தெரிவித்துள்ளார். அவருக்கு கடன் கொடுத்த பிரதான வங்கி நடவடிக்கை எடுக்கும் போது, தங்களது தொகை வந்து சேரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.