காஷ்மீர் ஆளுநரின் ஆலோசகராகிறார் விஜயகுமார் ஐ.பி.எஸ்...

இன்று ஜம்மு காஷ்மீருக்கு செல்லும் விஜயகுமார், நாளை வெள்ளிக்கிழமை, ஆளுநரின் ஆலோசகராக பொறுப்பேற்கிறார்
காஷ்மீர் ஆளுநரின் ஆலோசகராகிறார் விஜயகுமார் ஐ.பி.எஸ்...
Published on

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி விஜயகுமார், ஆளுநர் வோராவின் ஆலோசகராக பணியமர்த்தப்பட்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த பாதுகாப்பு ஆலோசகராக இருந்த, விஜயகுமார் கடந்த வாரம் தனது பணியில் இருந்து ஓய்வுபெற்றார். இந்நிலையில், விஜயகுமாரை தனக்கான ஆலோசகராக நியமித்து, காஷ்மீர் மாநில ஆளுநர் வோரா உத்தரவிட்டுள்ளார். ஆளுநரின் இந்த உத்தரவை அம்மாநில செயலாளர் வெளியிட்டுள்ளார். இதையடுத்து இன்று ஜம்மு காஷ்மீருக்கு செல்லும் விஜயகுமார், நாளை வெள்ளிக்கிழமை, ஆளுநரின் ஆலோசகராக பொறுப்பேற்கிறார்.

X

Thanthi TV
www.thanthitv.com