சமூக வலைத்தளத்தில் மோதிக் கொள்ளும் அஜித் - விஜய் ரசிகர்கள் : மாறி மாறி "ஹேஷ்டேக்" டிரெண்ட் செய்து வருவதால் பரபரப்பு

சமூக வலைத்தளங்களில், நடிகர் அஜித், மற்றும் நடிகர் விஜய் ரசிகர்கள் மாறி மாறி ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமூக வலைத்தளத்தில் மோதிக் கொள்ளும் அஜித் - விஜய் ரசிகர்கள் : மாறி மாறி "ஹேஷ்டேக்" டிரெண்ட் செய்து வருவதால் பரபரப்பு
Published on

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள " நேர்கொண்ட பார்வை " திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 8 ம் தேதி வெளி வரவுள்ளது. இந்நிலையில் , அஜித் ரசிகர்கள் "ஆகஸ்ட்8_தலதரிசனம்" என்ற ஹேஷ்டேக்கை உற்சாகத்துடன் டிவிட்டரில், பதிவிட்டு வந்தனர் . இந்த ஹேஷ்டேக்கிற்கு பதிலடியாக "ஆகஸ்ட்8_பாடைகட்டு" என்ற ஹேஷ்டேக்கும் திடீரென்று டிரெண்ட் ஆனது. இதனால் கோபமடைந்த அஜித் ரசிகர்கள் #RIPActorVijay என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்யத் துவங்கினர். இதனால், அதிர்ச்சியடைந்த விஜய் ரசிகர்கள் #LongLiveVIJAY என்ற ஹேஷ்டாக்கை எழுதி வருகின்றனர்.

இதனிடையே, இது குறித்து கருத்து பதிவிட்டுள்ள கிரிக்கெட் வீரர் அஸ்வின், நாட்டின் பல இடங்களில் பலத்த மழையால் சேதம், பஞ்சம், குற்றச் செயல்கள் என பல விஷயங்கள் உள்ளதாகவும், ஆனால், இந்த தலைமுறையினர் #RIPActorVijay -யை ட்ரெண்ட் செய்து வருவது வேதனை என தெரிவித்துள்ளார். நடிகர் சிபிராஜ் கூறிய கருத்தில், ஒருவரை அசிங்கப்படுத்துவது அவரை மேலும் உயர்த்தும் என்பது வரலாறு என பதிவிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com