வெற்றி..வெற்றி.. வெற்றி.. சாதனையோடு திரும்பும் இந்திய வீரர்

x

விண்வெளி சென்றுள்ள சுபான்ஷு சுக்லா இன்று பூமிக்கு புறப்படுகிறார்

ஆக்சியம்-4 திட்டத்தின்கீழ் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றுள்ள இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்கள், இன்று (திங்கள்கிழமை) மாலை 4.35 மணிக்கு பூமிக்கு திரும்பும் பயணத்தை தொடங்குகிறார்கள்.

பதினான்கு நாள் பயணமாக ஜூன் 26-ஆம் தேதி, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற அவர்கள், அங்கு உயிரி மருத்துவ அறிவியல், வேளாண்மை என பல்வேறு பரிமாணங்களில் 60க்கும் மேற்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டு அவர்கள் பூமிக்குத் திரும்புகிறார்கள். இந்நிலையில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் நடைபெற்ற பிரிவு உபசார விழாவில் பேசிய சுபான்ஷு சுக்லா, இது தனக்கு அற்புதமான பயணம் என்றும், நிறைய நினைவுகளுடன் தாம் பூமிக்குத் திரும்புவதாகவும் தெரிவித்தார். இந்த நினைவுகளையும், விண்வெளி பயணத்தில் கற்றுக் கொண்ட விஷயங்களையும் இந்திய மக்களுடன் பகிர்ந்து கொள்ளப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்