`வெற்றி.. வெற்றி..’’ - உலகுக்கே அறிவித்த இஸ்ரோ

x

மனித உடலில் ஏற்படும் மாற்றங்கள்.. சுபான்ஷு சுக்லா வெற்றிகரமாக ஆய்வு என இஸ்ரோ அறிவிப்பு

சர்வதேச விண்வெளி மையத்தில், இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, நுண்ணீர்ப்பு விசை மண்டலம் மற்றும் பூஜ்ஜிய புவி ஈர்ப்பு விசையில், மனித உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த ஆய்வை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக, இஸ்ரோ அறிவித்துள்ளது.

நுண்ணீர்ப்பு விசை பரிசோதனையில், விண்வெளியில் உயிரினங்களின் உயிர்வாழ்வு, மறுமலர்ச்சி மற்றும் இனப்பெருக்க நடத்தை ஆகியவற்றில் கவனம் செலுத்தபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நுண்ணீர்ப்பு விசை சூழலில் தீவிர உயிரினங்களின் மீள்தன்மைக்கு வழிவகுக்கும் அடிப்படை உயிரியல் வழிமுறைகள் பற்றிய நுண்ணறிவுகள் இந்த ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்