ரொம்ப உஷார் மக்களே - இந்த மாதிரி போன் கால் வந்தா நம்பிடாதீங்க

x

புதுச்சேரியில், அரசு மருத்துவமனை செவிலியரிடம் “டிஜிட்டல் அரெஸ்ட்" என்ற பெயரில் பண மோசடி செய்ததாக தெலுங்கானாவை சேர்ந்த தனியார் வங்கி ஊழியரை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்தனர். அரசு மருத்துவமனை செவிலியரை போதை பொருள் கடத்தல் வழக்கில் டிஜிட்டல் அரெஸ்ட் செய்வதாக கூறி மர்ம நபர்கள் 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை மோசடி செய்தனர். இது குறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் செவிலியர் புகார் அளித்தார். விசாரணையில், விசாகப்பட்டினத்தை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர், பொந்து சங்கரராவ் என்பவரது வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள வங்கி மேலாளரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்