அனந்தகுமார் உடலுக்கு வெங்கய்யா நாயுடு அஞ்சலி

மறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடலுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அஞ்சலி செலுத்தினார்.
அனந்தகுமார் உடலுக்கு வெங்கய்யா நாயுடு அஞ்சலி
Published on

மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக இருந்த அனந்தகுமார் நேற்று அதிகாலை உயிரிழந்தார். அவரது உடலுக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இன்று அவரது உடல் அவரது இல்லத்தில் இருந்து எடுத்து வரப்பட்டு, பெங்களூரு தேசிய கல்லூரி மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை அனந்தகுமாரின் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. அதில், பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பங்கேற்று அஞ்சலி செலுத்த உள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com