உ.பி.யில் நேருக்கு நேர் மோதிய வாகனங்கள் - 2 ஓட்டுநர்கள் உயிரிழப்பு

உ.பி.யில் நேருக்கு நேர் மோதிய வாகனங்கள் - 2 ஓட்டுநர்கள் உயிரிழப்பு

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் அதிவேகமாக வந்த லாரியும், வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட சம்பவத்தில் இரு வாகனங்களின் ஓட்டுநர்களும் உயிரிழந்தனர்.

கிசான் நகர்-பித்னு சாலையில் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், குறுகிய பாதையில் ஒரே நேரத்தில் வேனும், லாரியும் சென்றன.

இதில் இரு வாகனங்களும் பயங்கரமாக மோதிக்கொண்டது. விபத்தில் இரண்டு வாகன ஓட்டுநர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த கோர விபத்தில் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com