சித்தூர் மாவட்டம், காணிப்பாக்கம் வரசக்தி விநாயகர் கோவிலில், தொடர் விடுமுறையால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால், சிறு குழந்தை முதல் முதியவர்கள் வரை நீண்ட நேரமாக வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.கோவிலில் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என குற்றம்சாட்டிய பக்தர்கள், இனிவரும் காலங்களிலாவது அடிப்படை வசதிகள் செய்து தர கோவில் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர்.