"மாநில மொழிகளில் விமான அறிவிப்புகள் வேண்டும்" - மாநிலங்களவையில் வைகோ கோரிக்கை

விமானங்களில் மாநில மொழிகளில் அறிவிப்பு இடம் பெற வேண்டும் என வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
"மாநில மொழிகளில் விமான அறிவிப்புகள் வேண்டும்" - மாநிலங்களவையில் வைகோ கோரிக்கை
Published on
விமானங்களில் மாநில மொழிகளில் அறிவிப்பு இடம் பெற வேண்டும் என வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். மாநிலங்களவையில் பேசிய அவர், இந்தியாவில் இயக்கப்படும் விமானங்களில் ஹிந்தி மற்றும் ஆங்கில மொழியில் மட்டுமே அறிவிப்பு இடம்பெறுவதால், மாநிலங்களுக்குள் பயணிப்பவர்கள் புரிந்து கொள்ள முடியவில்லை என்று கூறினார். தமிழகத்துக்குள் செல்லும் விமானங்களில் தமிழில் அறிவிப்பு இடம் பெற வேண்டும் என்றும் வைகோ கேட்டுக் கொண்டார்.
X

Thanthi TV
www.thanthitv.com