Uttrapradesh | Accident | பனியால் நேர்ந்த கோரம்.. 3 பேர் மரணம் - அதிர்ச்சி காட்சி
உத்தர பிரதேச மாநிலம் அமேதி பகுதியில், அடர் பனி மூட்டம் காரணமாக 6 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மூடுபனியால் முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாத நிலையில், லாரி ஒன்று சாலையோர தடுப்பில் மோதியது. அதைத் தொடர்ந்து பின்னால் வந்த 3 லாரிகள், ஒரு கார் மற்றும் ஒரு பேருந்து ஆகியவை அடுத்தடுத்து மோதின. இவ்விபத்தில் மேலும் 16 பேர் படுகாயமடைந்தனர்.
Next Story
