Uttarpradesh கணவனை பிடித்த சந்தேக பேய் - மனைவியை கழுத்தறுத்து கொன்று விட்டு கதறி துடித்த கொடூரன்
கணவனை பிடித்த சந்தேக பேய் - மனைவியை கழுத்தறுத்து கொன்று விட்டு கதறி துடித்த கொடூரன் பார்ப்பதற்கு அப்பாவியை போல் கண்ணீர் விட்டு நெஞ்சை பிடித்து கொண்டு கதறியழும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த இவர், மனைவியை கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார்... உத்தரப்பிரதேசம் மீரட்டை சேர்ந்தவர் ஷாகிப். இவரது மனைவி கவுசார் கொலை செய்யப்பட்ட நிலையில் வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது குறித்து போலீசில் புகார் அளித்த கணவர் ஷாகிப், தான் சந்தைக்குச் சென்றிருந்த நேரத்தில் மர்ம நபர்கள் கவுசாரை கொலை செய்துவிட்டதாகக் கூறி, காவல்துறையினர் முன் கதறி அழுது நாடகமாடியுள்ளார். இருப்பினும், உயிரிழந்த பெண்ணின் சகோதரர் அளித்த புகாரின் பேரில் போலீசார் ஷாகிப்பிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அதில், மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பேப்பர் கட்டர் மூலம் அவரது கழுத்தை அறுத்துக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து ஷாகிப்பை பிடித்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.
