மகா கும்பமேளாவில் புனித நீராடிய போக்சோ குற்றவாளிக்கு காத்திருந்த அதிர்ச்சி
கும்பமேளாவில் சாமியார் வேடம் அணிந்து புனித நீராடி சென்ற போக்ஸோ குற்றவாளியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கடந்த ஜனவரி 30ஆம் தேதி, மத்திய பிரதேச மாநிலம் போபால் அருகே, 15வயது பள்ளி மாணவியிடம் 25 வயது ஆசிரியர் நிலேஷ் குமார் தூபே பாலியல்ரீதியாக அத்துமீறியதால், மாணவி உயிரை மாய்த்துக்கொண்டார். இந்நிலையில், தலைமறைவான ஆசிரியர் நிலேஷ், சாமியார் வேடத்தில் கும்பமேளாவில் சுற்றுவதாக தகவல் கிடைக்க, சாதுக்கள் வேடத்தில் போபால் போலீசாரும் தேடுதலை தீவிரப்படுத்தினர். ஆசிரியர் நிலேஷை பின்தொடர்ந்த போலீசார், இறுதியாக அவரது சொந்த ஊரான பீகார் மாநிலம் கைமரில் வைத்து கைது செய்தனர்.
Next Story
