மஹா கும்பமேளா - பக்தர்களுக்கு தன் கைகளால் உணவை பரிமாறிய கெளதம் அதானி
உத்தரப் பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மஹா கும்பமேளாவில் பங்கேற்ற தொழிலதிபர் கௌதம் அதானி, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.
முன்னதாக பக்தர்களுக்கு இஸ்கான் அமைப்புடன் இணைந்து அதானி குழுமம் வழங்கி வரும் இலவச உணவு சேவையை ஆய்வு செய்த அவர், பக்தர்களுக்கு தனது கைகளால் உணவுகளை பரிமாறினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த கௌதம் அதானி, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியது ஒரு அற்புதமான அனுபவம் என்றும் உத்தரபிரதேச மாநிலம் வளர்ச்சியை நோக்கி பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.
Next Story
