கார் கண்ணாடியில் கழுத்து சிக்கி துடிதுடித்து பலியான குழந்தை - பெற்றோர்களே உஷார்
உத்தரப்பிரதேசத்தில், கார் கதவின் கண்ணாடியில் சிக்கி குழந்தை இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலியா மாவட்டத்தைச் சேர்ந்த ரோஷன் தாக்கூர் என்பவர் புதிய காரை வாங்கிய நிலையில், பூஜை போடுவதற்காக கோயிலுக்குச் சென்றுள்ளார். அப்போது அவரது ஒன்றரை வயது குழந்தை ரேயான்ஷ், காரின் உள்ளே அமர்ந்தபடி கதவு வழியாக தலையை நீட்டி, அங்கு சுற்றித்திரிந்த குரங்குகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. இதனை கவனிக்காத தந்தை, எஞ்சினை இயக்கியபோது, கார் கதவின் கண்ணாடி தானாக மேலே உயர்ந்தது. இதில் குழந்தையின் கழுத்து சிக்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
