UttarPradesh | செருப்பில் எச்சில் துப்பி... இளைஞரை மிருகம் போல் தாக்கிய கும்பல் - உ.பி.யில் கொடூரம்
உத்தரப் பிரதேசத்தில் இளைஞரை கொடூரமாக தாக்கி பொதுவெளியில் அவமானப்படுத்திய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தியோரியா மாவட்டத்தில் உள்ள கோபராய் கிராமத்தை சேர்ந்த இளைஞர், கடந்த 29-ஆம் தேதி கடைவீதிக்கு செல்லும் போது வழிமறித்த 4 பேர், அந்த இளைஞரை காலணி மற்றும் பெல்டால் கண்மூடித்தனமாக தாக்கி உள்ளனர். பின்னர் காலணியில் எச்சிலை துப்பி, அதனை அந்த இளைஞரை நாவால் சுத்தம் செய்யும்படி அந்த கும்பல் கட்டாயப்படுத்தி உள்ளது. இது தொடர்பான காணொலி வெளியாகி கண்டனம் வலுத்த நிலையில், பாதிக்கப்பட்ட இளைஞரின் தாய் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
