ரயில்வே ட்ராக்கில் சென்ற கார்.. எதிரே வந்த ரயில்.. அலறிய மக்கள் - அடுத்து நடந்த ட்விஸ்ட்

x

உத்தர பிரதேசத்தில் குடிபோதையில் காரை ரயில் தண்டவாளத்தில் ஓட்டி வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை கண்ட ரயில்வே பணியாளர்கள் அளித்த தகவலின் பேரில், உடனடியாக அவ்வழியாக வந்த சரக்கு ரயில் நிறுத்தி வைக்கப்பட்டதால் அங்கு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. காருக்குள் இருந்த ஐவரும் கீழே இறங்கிய நிலையில், பின்னர் பொக்லைன் இயந்திரம் கொண்டு தண்டவாளத்தில் இருந்து கார் அகற்றப்பட்டது. அம்ரோஹாவில் (Amhora) நடந்த இந்த சம்பவத்தில் கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்