UttarPradesh | Scam | போலி பெட்ரோல் பங்க் நடத்திய பலே கும்பல் | உ.பி.யில் அடுத்த அதிர்ச்சி
போலி பெட்ரோல் பங்க் நடத்திய பலே கும்பல் | உ.பி.யில் அடுத்த அதிர்ச்சி
உத்தரப்பிரதேசத்தில் போலி பெட்ரோல் நிலையம் - அதிர்ச்சி உ.பி-யில் 10 ஆயிரம் லிட்டர் கலப்பட பெட்ரோல் பறிமுதல் போலி லைசன்ஸ் மூலம் கலப்பட பெட்ரோல் விற்ற கும்பல் உத்தரப்பிரதேசத்தில் 10 ஆயிரம் லிட்டர் கலப்பட பெட்ரோலை போலீசார் பறிமுதல் செய்தனர். ஷாஜகான்பூர் பகுதியில் போலி லைசன்ஸை வைத்துக்கொண்டு இயங்கிய பெட்ரோல் நிலையத்தை போலீசார் கண்டறிந்தனர். தொடர்ந்து அங்கு சோதனை செய்தபோது பெட்ரோலில் ரசாயன பூச்சு கலந்து விற்பனை செய்தது தெரியவந்தது. அதாவது, குறைந்த அளவு பெட்ரோலில் அதிக அளவு ரசாயனம் கலந்து விற்பனை நடந்துள்ளது. இதனையடுத்து கலப்பட பெட்ரோலை பறிமுதல் செய்த போலீசார், 5 பேரை கைது செய்தனர். போலி சுங்கச்சாவடி, போலி வங்கி போலி தூதரகம் வரிசையில் தற்போது போலி பெட்ரோல் நிலையமும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
