Uttar Pradesh | "மாசத்துல 3 முறை திருடலன்னா நோய் வந்துரும்.."- உலகில் யாருக்கும் இல்லாத வினோத நோய்
15 நாட்களாக கோயில்களில் கொள்ளையடித்த திருடர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில், திருடாமல் இருந்தால் மன நோயால் பாதிக்கப்படும் உமேஷ் யாதவ், தனக்கான மனநோய் சரியாக மாதத்தில் மூன்று முறை திருடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பல்வேறு கோயில்களில்,15 நாட்களாக தொடர் திருட்டில் ஈடுபட்ட வந்த திருடர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். இதுவரை 30 இடங்களில் திருடப்பட்ட, 10 லட்சம் ரூபாய் பதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள், கிரீடங்கள், கோயில் மணிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story
