Uttar Pradesh | சாலையின் நடுவே மின்கம்பம் - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

சாலையின் நடுவே மின்கம்பம் - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

Uttar Pradesh | சாலையின் நடுவே மின்கம்பம் - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி உத்தரபிரதேச மாநிலம் முன்னால் பகுதியில், தேசிய நெடுஞ்சாலையின் மையப்பகுதியிலேயே மின்கம்பம் ஒன்று அகற்றப்படாமல் அப்படியே விடப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புதிய நெடுஞ்சாலை அமைக்கும் பணியின்போது, அங்கிருந்த மின்கம்பங்களை அகற்றிவிட்டுச் சாலையை அமைக்காமல், அதிகாரிகள் மின்கம்பியை அப்படியே விட்டுவிட்டுச் சாலையை அமைத்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதிவேகமாக வரும் வாகனங்கள் இந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளதால், பயணிகளின் உயிருக்கு உலைவைக்கும் இந்த மின்கம்பத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com