மதுவை கொடுத்து மயங்க வைத்து ஒடும் காரில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்

உத்தரபிரதேசத்தில் கல்லூரி மாணவியை காரில் கடத்திச் சென்று, பலாத்காரம் செய்த இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுவை கொடுத்து மயங்க வைத்து ஒடும் காரில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்
Published on

முசாபர் நகரில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த 24 வயது மாணவி ஒருவரை, திடீரென காரில் வந்த மூவர் துப்பாக்கி முனையில் கடத்தியதோடு, காருக்குள் வைத்து மது குடிக்க வைத்துள்ளனர். மாணவி மயங்கியதும், மூவரும் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், கல்லூரி வாயிலில் மாணவியை இறக்கி விட்டு, வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டிச் சென்றுள்ளனர். இது குறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், 26 வயது சுபோத் மற்றும் அவரது நண்பர்கள் இருவரை போலீசார் தேடி வருகின்றனர். சாலையில் நடந்து சென்ற கல்லூரி மாணவி கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com