Uttar Pradesh | பள்ளி வேன் மீது மோதிய கார்... நொடியில் நடந்த அதிர்ச்சி

x

பள்ளி வேன் மீது மோதிய கார்... நொடியில் நடந்த அதிர்ச்சி

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் பள்ளி வேன் மீது சொகுசு கார் மோதி 2 மாணவிகள் காயம் அடைந்தனர். வேகமாக வந்த சொகுசு கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் மீது மோதியதுதான் விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. மேலும், அந்த சொகுசு காரில் இருந்த இருவர், வேன் ஓட்டுநரை தாக்க முயன்றதாகவும் தெரிகிறது. இதில் காயமடைந்த 2 சிறுமிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கு காரணமான சொகுசு கார் ஜெசிபி மூலம் அப்புறப்படுத்தப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்