Uttar Pradesh Buffalo | என்னது ஒரு எருமையின் விலை ரூ.8 கோடியா..! - அப்படி என்ன ஸ்பெஷல்?

x

உத்தரப்பிரதேச மாநிலம், மீரட்டில் ஒரு எருமை மாட்டின் விலையை 8 கோடி ரூபாயாக உரிமையாளர் நிர்ணயித்தது, வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மீரட் வேளாண் பல்கலைக்கழகத்தில் நடந்த மாடுகள் விழாவில் “விதாயக்“என்ற எருமைக்கு 8 கோடி ரூபாய் மதிப்பு நிர்ணயிக்கப்பட்டது. ஹரியானாவைச் சேர்ந்த நரேந்திரசிங் என்பவர் வளர்த்த இந்த எருமை, வருடத்திற்கு சுமார் 50 லட்சம் ரூபாய் வரை அதன் விந்து விற்பனை மூலம் வருமானம் ஈட்டுவதாகவும், அதன் விந்தில் பிறக்கும் எருமைகள் ஒரு நாளைக்கு 21 லிட்டர் வரை பால் தருகின்றன என்றும் கூறப்படுகிறது. மேலும், இந்த எருமை தினமும் பச்சை தீவனத்துடன் முந்திரி, பாதாம், தின்பதாகவும், அதற்கென ஏசி வசதி செய்யப்படுள்ளதாகவும் உரிமையாளர் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்