குடிநீருக்கு பதில் சிறுநீர்? ஆய்வில் வெளிவந்த பகீர் உண்மை
பொறியாளருக்கு குடிநீருக்கு பதில் சிறுநீரை பியூன் கொடுத்ததாக புகார்
ஒடிசா மாநிலம், கஜபதி மாவட்டத்தில், அரசு அலுவலகத்தில் புதிதாக பணிக்கு சேர்ந்த இளநிலை பொறியாளருக்கு அங்கு பணியாற்றும் பியூன் குடிநீருக்குப் பதில் சிறுநீரை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. பொறியாளர் சச்சின் கவுடா இரவு உணவு முடித்த பிறகு தண்ணீர் கேட்டபோது, அவருக்கு பியூன் நாராயண் நாயக், தண்ணீருக்கு பதில் சிறுநீரை பாட்டிலில் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, பொறியாளர் அளித்த புகாரின் பேரில், பாட்டிலில் இருந்த திரவத்தை ஆய்வு செய்ததில், அதில் அமோனியாவின் அளவு அதிகமாக இருந்தது தெரியவந்துள்ளது. மற்றொரு ஆய்வகத்தில் உறுதிப்படுத்தும் சோதனை நடைபெற்று வருகிறது. ஆனால், உணவுடன் குடிநீர் பாட்டிலை தாம் வைத்ததாகவும், இடையில் என்ன நடந்தது என தனக்குத் தெரியாது என்றும் குற்றச்சாட்டுக்கு ஆளான பியூன் தெரிவித்துள்ளார்.
