காம பேய்களை 24 மணி நேரத்தில் வேட்டையாடிய உபி போலீஸ்
காலில் குண்டடிபட்ட காயத்தோடு காவல்துறையினர் அலேக்காக தூக்கி செல்லும் இவர்கள் தான் முந்தினம் இரவு மாற்று திறனாளி பெண்ணை துரத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த காம பிசாசுகள்.
காவல்துறையின் செக்போஸ்ட் அருகிலயே நடந்த துணிகர சம்பவத்தின் பின்னணியை அறிய விசாரணையில் களமிறங்கினோம்.
உத்தரபிரதேச மாநிலம், பலராம்பூர் மாவட்டத்தை சேர்ந்த காது கேட்காத வாய் பேச முடியாத இளம் பெண் கடந்த திங்கட்கிழமை இரவு உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பி உள்ளார்.
காவல்துறையின் உயர் அதிகாரிகள் குடியிறுக்கும் பகுதி என்பதாலும், அருகிலயே போலீஸ் செக்போஸ்ட் அமைந்திருந்த காரணத்தினாலும் அந்த மாற்று திறனாளி பெண் இரவில் தனியாக நடந்து செல்வதை பாதுகாப்பாகவே உணர்ந்திருக்கிறார்.
ஆனால், அன்று அவருடைய நம்பிக்கை பொய்த்திருக்கிறது. இருசக்கர வாகனத்தில் இளம்பெண்ணை பின் தொடர்ந்து வந்த இரண்டு போதை ஆசாமிகள் திடீரென அவரை வழிமறித்து தங்களுடைய பாலியல் இச்சைக்கு இணங்க அழைத்துள்ளனர். பதறிப்போன இளம்பெண் அவர்களிடமிருந்து தப்பித்து ஓடியுள்ளார்.
இளம்பெண் காது கேட்காத வாய் பேச முடியாதவர் என்பதை தெரிந்ததும், போதை ஆசாமிகளுக்குள் தைரியம் பிறந்திருக்கிறது.
இருசக்கர வாகனத்தில் மாற்று திறனாளி பெண்ணை விடாமல் துரத்திச் சென்றவர்கள் அவரை கடத்திச் சென்று போலீஸ் செக்போஸ்ட் அருகிலயே உள்ள ஆள் அரவமற்ற இடத்தில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளனர்..
உறவினர் வீட்டிலிருந்து கிளம்பிய மகள் வெகுநேரமாகியும் வீடு திரும்பாத காரணத்தால் சந்தேகமடைந்த பெற்றோர் அவரை தேடி சென்றுள்ளனர்.
அப்போது, அவர் செக்போஸ்ட் அருகே ஆடைகள் கலைந்து அலங்கோலமாக கிடப்பதை பார்த்து அதிர்ந்து போயுள்ளனர்.
உடனடியாக, மகளை மீட்டு மருத்துவமனையிலும் அனுமதித்துள்ளனர். தற்போது பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
நடந்த சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து மாற்று திறனாளி பெண் மீள முடியாமல் தவிப்பதாக உறவினர்கள் வேதனையோடு தெரிவித்துள்ளனர்.
காவல்துறை உயர் அதிகாரிகளின் குடியிறுப்பு இருக்கும் இடத்தின் அருகிலயே இந்த சம்பவம் நடந்திருப்பது ஒட்டுமொத்த உத்தரபிரதேசத்தையும் உலுக்கிப் போட்டது.
நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீஸார் அப்பகுதியில் பொருட்டப்பட்டிருந்த சிசிடிவி கேமிராக்களை ஆராய்ந்துள்ளனர்.
அதில், அந்த மாற்று திறனாளி பெண்ணை இரண்டு வாலிபர்கள் டூவிலரில் சேஸ் செய்து சென்றது பதிவாகி உள்ளது.
குற்றவாளிகள் Ankur Varma மற்றும் Harshit Pandey அடையாளம் கண்ட காவல்துறையினர் சம்பவம் நடந்து 24 மணி நேரத்திற்குள் இருவரையும் சுற்றி வளைத்துள்ளனர்.
ஆனால், காவல்துறையினரை பார்த்ததும் குற்றவாளிகள் தப்பியோட முயன்றிருக்கிறார்கள், அதன்காரணமாக இருவரின் காலிலும் துப்பாக்கியால் காவல்துறையினர் சுட்டுப் பிடித்துள்ளனர்.
சம்பவம் நடந்த பகுதியில் பொருட்டப்பட்டுள்ள சிசிடிவி கேமிராக்கள் பல இடங்களில் வேலையே செய்யவில்லை, அதோடு, இரவு செக்போஸ்ட்டில் காவல்துறையினர் டூட்டியில் இருந்து இருந்தாலோ அல்லது ரோந்து பணி மேற்கொண்டிருந்தாலோ இந்த சம்பவமே நடந்திருக்காது என காவல்துறையின் மீது அப்பகுதிவாசிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
என்கவுண்டர் மூலம் சுட்டுப்பிடிக்கப்பட்ட Ankur Varma மற்றும் Harshit Pandey ஆகிய இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்த காவல்துறையினர் அவர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முழுமையான விசாரணைக்கு பிறகே அவர்கள் இதே பாணியில் வேறு ஏதேனும் குற்ற சம்பவங்களில் ஈடுப்பட்டுள்ளார்களா ? என்பது தெரியவரும்.
