UP Crime | கணவரை கொன்று கிரைண்டரில் அரைத்த மனைவி | கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த கொடூரம்
உத்தர பிரதேசத்தில் கணவனை கள்ளக்காதலன் உடன் சேர்ந்து கொலை செய்து, உடல் உறுப்புகளை மனைவி கிரைண்டரில் போட்டு அரைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் சம்பல் பகுதியைச் சேர்ந்த ரூபிக்கும், கௌரவ் என்ற இளைஞருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டதாக தெரிகிறது. இது ரூபியின் கணவர் ராகுலுக்கு தெரியவந்ததால், அவரை கொலை செய்ய ரூபி திட்டமிட்டார். அதன்படி கெளரவ் மற்றும் அபிஷேக் ஆகியோருடன் சேர்ந்து கணவனை ரூபி கொலை செய்துள்ளார்.
பின்னர், உடலை பல துண்டுகளாக வெட்டி கிரைண்டரில் போட்டு அரைத்ததுடன், அவற்றை பாலித்தீன் பையில் போட்டு அடைத்து சாக்கடையில் வீசி எறிந்துள்ளனர். இதையறிந்த போலீசார்,,, ரூபி, அவரது கள்ளக்காதலன் கௌரவ் மற்றும் நண்பர் அபிஷேக் ஆகிய மூவரையும் கைது செய்துள்ளனர்.
Next Story
