UP Hotel | ஆர்டர் தாமதித்ததால் ஹோட்டலையே சூறையாடிய இளைஞர்கள் - வைரலாகும் பகீர் காட்சி

x

UP Hotel | ஆர்டர் தாமதித்ததால் ஹோட்டலையே சூறையாடிய இளைஞர்கள் - வைரலாகும் பகீர் காட்சி

உணவு எடுத்து வர தாமதம் - ஓட்டலை சூறையாடிய இளைஞர்கள்

உத்தரபிரதேசத்தில் ஆர்டர் செய்த உணவை எடுத்து வர தாமதமானதால் இளைஞர்கள் உணவகத்தை சூறையாடிய காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு சென்ற சில இளைஞர்கள் உணவை ஆர்டர் செய்துள்ளனர். ஆர்டர் செய்த உணவை கொண்டு வருவதற்கு தாமதமானதால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் உணவகத்தில் உள்ள மேஜை நாற்காலி ஆகியவற்றை கீழே போட்டு உடைத்து சூறையாடினர். இதனால் ஓட்டலில் இருந்த வாடிக்கையாளர்கள் சிதறி ஓடினர்.இது குறித்து நந்தா கிராம் போலீசார் வழக்கு பதிவு செய்து உணவகத்தை சேதப்படுத்திய ராஜ்தீப் தியாகி, அன்ஷி தியாகி, மான்டி ஜாட் ஆகிய 3 பேரை கைது செய்தனர்


Next Story

மேலும் செய்திகள்