UP | Crime | Police | 16வயது மாணவியை கொடூரமாக கொன்ற Ex.ஆண் நண்பர் | அழுகிய நிலையில் மீட்கப்பட்ட உடல்

16வயது மாணவியை கொடூரமாக கொன்ற Ex.ஆண் நண்பர் | அழுகிய நிலையில் மீட்கப்பட்ட உடல்

Uttar Pradesh | Crime | Police | 16 வயது மாணவியை கொடூரமாக கொன்ற Ex. ஆண் நண்பர் | 15 நாட்களுக்கு பிறகு அழுகிய நிலையில் மீட்கப்பட்ட உடல் #uttarpradesh #crime #police #murdermystery #thanthitv உத்தரப் பிரதேசத்தில் மாயமான 16 வயது மாணவி கொடூரக் கொலை நட்பை முறித்ததால் கொலை செய்ததாக முன்னாள் நண்பர் வாக்குமூலம் உத்தரப் பிரதேச மாநிலம் ராய்பரேலியில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு காணாமல் போன 16 வயது பள்ளி மாணவி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 11-ம் வகுப்பு படித்து வந்த ருசி, கடந்த அக்டோபர் 16-ம் தேதி மாலை காணாமல் போனார். இதுகுறித்து அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, ருசி கடைசியாக ரெளனக் யாதவ் என்ற இளைஞருடன் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்து விசாரித்ததில், இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்பதும், நட்பு முறிந்த பிறகு ருசி மற்ற ஆண் நண்பர்களுடன் பேசியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரைக் கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்ததாகக் கூறப்படுகிறது. அக்டோபர் 14-ம் தேதியே ருசியை பைக்கில் அழைத்துச் சென்று கத்தியால் குத்தியும், துப்பட்டாவால் கழுத்தை நெரித்தும் கொலை செய்து, ரயில் பெட்டி தொழிற்சாலை அருகே உள்ள புதரில் உடலை வீசியதாகத் தெரியவந்துள்ளது. அவர் காட்டிய இடத்தில் அழுகிய நிலையில் மாணவியின் உடலை மீட்ட போலீசார், கொலைக்குப் பயன்படுத்திய கத்தி மற்றும் துப்பட்டாவையும் பறிமுதல் செய்துள்ளனர்.

X