UP Bus Accident | ஆற்றின் நடுவே பாலத்தில் தொங்கிய பேருந்து | கத்தி கதறிய பயணிகள்

x

உ.பி.யில் அரசுப் பேருந்து பாலத்தில் உள்ள தடுப்பில் மோதி விபத்து

உத்தரப்பிரதேசத்தில் அரசுப் பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து கங்கை ஆற்றின் மீது கட்டப்பட்ட பாலத்தில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

பாலத்தில் உள்ள தடுப்பை உடைத்துக் கொண்டு அருகே இருந்த மற்றொரு பாலத்தின் மீது பேருந்து உடைத்துக் கொண்டு நின்றது. கீழே ஆக்ரோஷமாக கங்கை நதி பாய்ந்து ஓடிக் கொண்டிருந்த நிலையில், இரண்டு பாலத்திற்கு இடையில் பேருந்து நீண்ட நேரம் சிக்கிக் கொண்டு தொங்கியபடி இருந்ததால் பயணிகள் அச்சத்தில் கதறினர். இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள், நீண்ட நேரம் போராடி, பேருந்தில் இருந்த பயணிகளை பத்திரமாக கீழே இறக்கினர். இந்த விபத்தில் சில பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்