வரவேற்க வராத உயர் அதிகாரிகள் - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அதிருப்தி
மகாராஷ்டிராவில் தம்மை வரவேற்க தலைமைச் செயலாளர், காவல்துறை இயக்குநர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வராததற்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள பி.ஆர். கவாய் மும்பையில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்பதற்காக தமது சொந்த மாநிலமான மகாராஷ்டிராவுக்கு சென்றார்.
அப்போது, தம்மை வரவேற்க தலைமைச் செயலாளர், காவல்துறை இயக்குநர், காவல் ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வரவில்லை என, பி.ஆர். கவாய் அதிருப்தி தெரிவித்தார்.
இதனிடையே, அதிருப்தியை வெளிப்படுத்திய பிறகு அவர் அம்பேத்கர் நினைவிடம் சென்றபோது, அங்கு தலைமைச் செயலாளர் உள்ளிட்ட 3 அதிகாரிகளும் வருகை தந்தனர்.
Next Story