சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம்..! 10 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கும் ஐயப்பன் பக்தர்கள்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் படையெடுப்பதால் கூட்ட நெரிசலுடன் காணப்படுகிறது. இதனால் கூட்ட நெரிசலை தவிர்க்க எருமேலி, நிலக்கல், துலாபள்ளி உள்ளிட்ட பகுதிகளில், ஐயப்ப பக்தர்களை வாகனங்களை நிறுத்தியுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் சாலையிலேயே வாகனங்களை நிறுத்தி 10 மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பம்பை செல்லும் பக்தர்கள் மலையேற 5 மணி நேரம் காத்திருப்பதாகவும், உணவு குடிநீர் இன்றி கடும் குளிரில் அவதிப்படுவதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்

X

Thanthi TV
www.thanthitv.com