உன்னா சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளம் பெண் சிகிச்சை பெற்று வரும் கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழக அவசர சிகிச்சை பிரிவு முன்பு அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்துக்கு காரணமான பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் குல்தீவ் ஷெனீகர் விரைவில் தண்டிக்கப்பட வேண்டும் என்றும், சிறையில் உள்ள பாதிக்கப்பட்ட பெண்ணின் மாமனை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.