உன்னா பாலியல் பலாத்காரம் - ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மீது தாக்குதல் - தி.மு.க. சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம்

பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினரால் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் இளம் பெண் மற்றும் அவரின் உறவினர்கள் சென்ற வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் அந்த பெண் படுகாயம் அடைந்தார்.
உன்னா பாலியல் பலாத்காரம் - ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மீது தாக்குதல் - தி.மு.க. சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம்
Published on

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினரால் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் இளம் பெண் மற்றும் அவரின் உறவினர்கள் சென்ற வாகனம் மீது லாரி மோதிய விபத்தில், அந்த பெண் படுகாயம் அடைந்தார். அவரது உறவினர்கள் 2 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்கு மூளையாக சிறையில் உள்ள பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் இருப்பதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம்சாட்டியுள்ளார். இதே போன்று அமேதி தொகுதியில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டு உள்ளார். இந்த சம்பவங்களை கண்டித்தும், சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு சமாஜ்வாதி, தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பிரச்சினை நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.

X

Thanthi TV
www.thanthitv.com