தமிழ்நாடு குறித்து புகழ்ந்த மத்திய அமைச்சர்
தமிழ்நாடு குறித்து புகழ்ந்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
தமிழ்நாடு, இந்தியாவின் மிக முக்கியமான மின்னணு உற்பத்தி மையமாக உருவெடுப்பதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் தமிழில் செயற்கை நுண்ணறிவுக்கான திட்டம் தொடங்கப்பட்டது. இதில் காணொளி வாயிலாக கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஏற்கனவே வந்தே பாரத் ரயில் உற்பத்தி மையமாக தமிழ்நாடு திகழ்கிறது. விரைவில் ரயில் வீல் உற்பத்தி தொழிற்சாலை சென்னை அருகே விரைவில் வரவிருப்பதாக கூறினார். அப்போது ரயில்வே துறையில் தமிழ்நாடு முதன்மையாக இருக்கும் என்று தெரிவித்தார்.
Next Story