"சிம்கார்டுகள் வழங்க ஆதார் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்" - மத்திய அரசு உத்தரவு

புதிய சிம் கார்டுகளை வழங்குவதற்காக ஆதாரை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனத் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
"சிம்கார்டுகள் வழங்க ஆதார் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்" - மத்திய அரசு உத்தரவு
Published on

இது தொடர்பாக தொலைத்தொடர்பு துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நவம்பர் 5ம் தேதிக்குள் இது தொடர்பாக தொலைதொடர்பு நிறுவனங்கள் பதில் அறிக்கை ஒன்றை அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள் தாங்களாகவே முன்வந்து ஆதார் அட்டையை அடையாளச் சான்றாக அளித்தால் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆதார் முற்றிலும் பாதுகாப்பானது என்று மத்திய தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணைய தலைவர் ஆர்.எஸ்.சர்மா தெரிவித்துள்ளார். தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை குறித்து பொதுமக்கள் குழப்பிக்கொள்ள வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com