முத்தலாக் தடை சட்டத்தில் 3 திருத்தங்கள் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

முத்தலாக் அவசர சட்டத்திற்கு, பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது
முத்தலாக் தடை சட்டத்தில் 3 திருத்தங்கள் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Published on

முத்தலாக் அவசர சட்டத்திற்கு, பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில்,கட்டாய முத்தலாக் சட்டத்தில், திருத்தம் கொண்டு வரப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முத்தலாக் தடுப்பு சட்டத்தில் கைதானால் நீதிமன்றத்தில் ஜாமின் பெறலாம் என்றும், முத்தலாக் வழங்கிய பின் கணவன் மனைவி இடையே சமரசம் ஏற்பட்டால் அபராதம் செலுத்தி மீண்டும் சேரலாம் எனவும் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதே போல், முத்தலாக்கில் கணவன், மனைவியின் குடும்பத்தினர் மட்டுமே புகார் அளிக்கலாம் என்றும் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனிடையே இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், முத்தலாக் தடை சட்டத்தின் மூலம் இஸ்லாமிய பெண்களின் உரிமை பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பெண்ணை விசாரித்த பின்னர், கணவருக்கு மாஜிஸ்திரேட் ஜாமின் வழங்க வகை செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த முக்கிய விவகாரத்தில், மத்திய அரசுக்கு காங்கிரஸ் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் தெரிவித்தார்.

முத்தலாக் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய வேண்டாம் என கூறிய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், முத்தலாக் சட்டம் என்பது மதம் தொடர்பானது அல்ல எனவும் குறிப்பிட்டார். வாக்கு வங்கிக்காக முத்தலாக் சட்டத்தை காங்கிரஸ் எதிர்த்து வந்தது என்றும் ரவி சங்கர் பிரசாத் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com