அனுமதியின்றி மாட்டு வண்டி பந்தயம் = 10 பேர் மீது வழக்குப்பதிவு
திருப்பத்தூர் அருகே அய்யனார் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அனுமதி இல்லாமல் மாட்டு வண்டி எல்லைப் பந்தயம் நடத்தப்பட்டதால் பத்து பேர்மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திருப்பத்தூர் அருகே உள்ள இளங்குடி கிராமத்தில் அமைந்துள்ள அய்யனார் கோயிலின் முதலாம் ஆண்டு மகா கும்பாபிஷேக விழாவின் ஒரு பகுதியாக இரட்டை மாட்டு வண்டி எல்லைப் பந்தயம் நடைபெற்றது. திருச்சி, மதுரை, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து போட்டியாளர்கள் காளைகளுடன் கலந்து கொண்டனர். திருப்பத்தூர்-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இப்போட்டிக்கு தேவையான முன் அனுமதி பெறாத காரணத்தால், நாச்சியார்புரம் போலீசார் பத்து பேர்மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Next Story
