கடும் வேதனை.. விரக்தி.. மொத்தமாக விலகும் பிரபல இந்திய வீரர்?

x

கடும் வேதனை.. விரக்தி.. மொத்தமாக விலகும் பிரபல இந்திய வீரர்?

நடப்பாண்டிற்கான ஐபிஎல் ஏலத்தில் தன்னை எந்த அணியும் ஏலத்தில் எடுக்காதது வருத்தம் அளிப்பதாக, இந்திய அணி வீரர் உமேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், ஏலத்தில் தன்னுடைய பெயர் கடைசியில் வந்ததால், அணிகளிடம் போதுமான பணம் இல்லாமல் இருந்திருக்கலாம் என்றும், 15 ஆண்டுகளாக விளையாடிய பின்பு, திடீரென தேர்வு செய்யப்படாமல் போனதால் விரக்தி அடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னால் முடியும் வரை 140 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீச உள்ளதாகவும், தன்னால் முடியாது என்பதை உணரும்போது, யாரிடமும் சொல்லாமல் கிரிக்கெட்டில் இருந்து விலகிக் கொள்வேன் என்று உமேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்