கொச்சி கடலில் குளித்த இரு ஏமன் நாட்டு மாணவர்கள் மாயம்
கோயம்புத்தூரில் படித்து வந்த ஏமன் நாட்டை சேர்ந்த இரு கல்லூரி மாணவர்கள், கொச்சி கடலில் மாயமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் உள்ள தனியார் கலை கல்லூரியில் படித்து வந்த 9 பேர் கொண்ட குழுவினர், கொச்சிக்கு காரில் சுற்றுலா சென்றனர். அப்போது, கடலில் அவர்கள் குளித்தபோது, அப்துல் சலாம் மற்றும் ஜப்ரான் கலீல் ஆகிய இருவரும் நீரில் மூழ்கி மாயமாகினர். இது குறித்து தகவல் அறிந்து வந்த கடற்படையினர், மீனவர்களுடன் சேர்ந்து மாயமான இருவரையும் தேடி வருகின்றனர்.
Next Story
