அவனியாபுரத்தில் பாண்டியர் காலத்து மண்டபங்கள் கண்டுபிடிப்பு

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் பாண்டியர் காலத்தை சேர்ந்த இரண்டு மண்டபங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவனியாபுரத்தில் பாண்டியர் காலத்து மண்டபங்கள் கண்டுபிடிப்பு
Published on
அவனியாபுரம் பகுதியில் உள்ள அருள்மிகு கல்யாண சுந்தரேஷ்வரர் திருக்கோயில் அருகே புராதானமான பாண்டியர் கால மண்டபங்கள் முட்புதர்களால் மண்டி மறைத்து காணப்பட்டது. இதனை 30 வருடங்களுக்கு பின் கோவில் அறநிலைய துறை அதிகாரிகள் , மற்றும் பொதுமக்கள் துணையுடன் புனரமைப்பு செய்தனர்.அதில் பழங்கால சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன .இதில் முருகன் சிலை, நந்தி தலையில்லாமல் சிதிலடைந்தும், ஐந்து முக லிங்கம் உள்ளிட்ட சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த மண்டபத்தில் உள்ள சுவர்களில் பூதங்கள், போர் வீரர்கள், அரசர்கள் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து மண்டபங்களை சுற்றி உள்ள முட்கள், மற்றும் மரங்களை ஜேசிபி இயந்திரம் மூலம் அதிகாரிகள் அகற்றி சீரமைத்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com