பீகார் வாக்காளர் பட்டியலில் 2 பெண் பாகிஸ்தானியர் பெயர்கள்
பீகார் வாக்காளர் பட்டியலில் பாகிஸ்தானியர்கள் என கூறப்படும் இருவரது பெயர்கள் கண்டறியப்பட்டது அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இம்ரானா கானம் என்ற இம்ரானா கதூன் மற்றும் ஃபிர்தௌசியா கானாம் என்ற ஃபிர்தௌசியா கட்டூன் என அடையாளம் காணப்பட்ட இரு பெண்கள், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ரங்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், பல ஆண்டுகளுக்கு முன்பு விசாவில் இந்தியா வந்த இவர்கள் இருவரும் விசா காலாவதியான போதிலும் பீகார் மாநிலம் பாகல்பூரில் வசித்து வருவதும் தெரியவந்தது. இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில்,
அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி, வாக்காளர் அடையாள அட்டைகளை ரத்து செய்யும் செயல்முறை தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
