சத்தீஸ்கரில் கரடி தாக்குதலில் இருவர் உயிரிழப்பு - பொதுமக்கள் அச்சம்
சத்தீஸ்கரில் கரடி தாக்குதலில் இருவர் உயிரிழப்பு - பொதுமக்கள் அச்சம்
சத்தீஸ்கரில் கரடி தாக்கியதில் இருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கேர் மாவட்டம் மார்கடோலா கிராமத்தில், வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் மீது பெண் கரடி ஒன்று திடீரென பாய்ந்து தாக்கி உள்ளது.
இந்த தாக்குதலில் சகோதர - சகோதரி உட்பட இருவர் உயிரிழந்தனர்.
மேலும் 3 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அப்பகுதியில் கரடியின் தொடர் நடமாட்டத்தால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கரடியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
