கர்நாடகாவில் 2 காங். எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா...

முதலமைச்சர் குமாரசாமி வெளிநாடு சென்ற நிலையில் பரபரப்பு.
கர்நாடகாவில் 2 காங். எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா...
Published on

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். விஜயநகர் தொகுதி உறுப்பினர் ஆனந்த் சிங் மற்றும் கோகாக் தொகுதி உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஜார்கிஹோலி ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். ஆனந்த் சிங், தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்கிய நிலையில், ஜார்கிஹோலி, சபாநாயகரிடம் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். முதலமைச்சர் குமாரசாமி தற்போது அமெரிக்காவில் உள்ள நிலையில், கூட்டணி கட்சியான காங்கிரசில் இருந்து 2 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com