'பிரளய்' ஏவுகணையின் 2 தொடர்ச்சியான சோதனைகள் வெற்றி

x

ஒடிசா கடற்கரையில் உள்ள அப்துல் கலாம் தீவில் இருந்து, உள்நாட்டு தயாரிப்பான பிரளய் ஏவுகணையின் இரண்டு தொடர்ச்சியான சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியதாக டிஆர்டிஓ தெரிவித்துள்ளது. குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணையான இதன் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச தூர திறனை சோதனை செய்யும் வகையில் நடத்தப்பட்ட சோதனைகளில் ஏவுகணை திட்டமிட்ட பாதையைப் பின்பற்றி இலக்கை துல்லியமாக அடைந்ததாக இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. சுமார் 150 முதல் 500 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்ட பிரளய் ஏவுகணை, இந்திய ஆயுதப்படைகளின் திறன்களை மேம்படுத்தும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்